ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் படகை இலங்கை கடற்படை மோதி சேதம்: தாக்குதலில் நால்வர் படுகாயம்
கச்சதீவுக்கு(Kachchatheevu) அருகில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் படகை இலங்கை கடற்படையின் கப்பல் (sri lanka Navy) மோதி சேதப்படுத்தியதுடன் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு கடற்றொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (08.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (08) அனுமதி சீட்டு பெற்ற கடற்றொழிலாளர்கள் விசைப்படகுகளில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் கப்பலானது ஒரு விசைப்படகின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளது.
இதையடுத்து படகில் இருந்த நான்கு கடற்றொழிலாளர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் இரும்பு கம்பியினால் தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த கடற்றொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படை ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை தாக்குவதும் கைது செய்வதும் தொடர்கதையாக இடம்பெற்று வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
[PD0YX2X ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |