சர்ச்சையை தோற்றுவித்த தமிழக விசைப்படகு சங்க தலைவரின் கருத்து: வடமாகாண கடற்றொழிலாளர்கள் அதிருப்தி
ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலரளர் சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த எமக்கு உதவிகளை திருப்பி கையளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறைமையை மீறாதீர்கள்
இந்திய கடற்றொழிலரளர்கள் விடயத்தில் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிற விடையம் எமது இறைமையை மீறாதீர்கள், எமது எல்லையை தாண்டாதீர்கள் என்று.
நாங்கள் தமிழக கடற்றொழிலரளர்களை எந்த விதத்திலும், அவர்களின் எந்தச் செயல்பாட்டிலும் உள் நுழைவதில்லை. அவர்களுக்கு எதிரான வார்த்தை பிரையோகங்களை கூட நாங்கள் கவனமாக கையாள்கிறோம்.
இந்நிலையில், தமிழக கடற்றொழிலாளர்கள் எங்களை ஏதோ ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற தொனிப்பொருளில் தான் ராமேஸ்வரம் விசைப்படகு சங்க தலைவர் எமரிட்ரின் கருத்து அமைந்துள்ளது.
அதே போன்றுதான் சட்ட விரோதமான கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடும் அமைந்துள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |