திருகோணமலையில் அரச ஊழியர் போல் நடித்து பண மோசடி
திருகோணமலை - கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் அரச உத்தியோகத்தர் என்று தன்னை கூறி நூதன முறையில் பண மோசடியில் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வயோதிபர்களிடம் அஸ்வெஸ்கம திட்டத்தில் தங்களின் பெயர் வந்துள்ளது என்று கூறி பணம் மோசடியில் இவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கந்தளாய் ஆரியவங்ச மாவத்தை வாத்தியகம வட்டுக்கச்சி மற்றும் லைட்வீதி போன்ற பகுதிகளில் தன் கைவரிசையை காட்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தங்களுக்கு அஸ்வெஸ்கம திட்டத்தில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி இப்பகுதிகளில் நான்காயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் நடமாடியமை தொடர்பாக அப்பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி போன்றவற்றில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கந்தளாய் பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |