1, 700 ரூபா சம்பளத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை: மருதபாண்டி ராமேஷ்வரன் உறுதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1, 700 ரூபா சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் (Maruthapandi Rameshwaran) தெரிவித்துள்ளார்.
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வில் இன்று (29.05.2024) கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த முறை சம்பள நிர்ணய சபை ஊடாக ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட போதும் அதனை வழங்க முடியாது எனக்கூறி தோட்ட நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. எனினும், இறுதியில் நாம் வெற்றிபெற்றோம்.
சம்பள விவகாரத்தில் அரசியல்
இந்நிலையில், பல சுற்று பேச்சுகளின் பின்னரே இம்முறை 1, 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்களில் கம்பனிகள் பங்கேற்கவில்லை. அது அவர்களின் தவறு.
எனவே, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள தொகையை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, கம்பனிகள் வெளியேறலாம். இது பற்றி அரசாங்கமும் அறிவித்துவிட்டது.
1,700 என்பது தேர்தல் வாக்குறுதி அல்ல, எதிரணியில் உள்ள சிலர்தான்
சம்பள விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர். கம்பனிகளை நீதிமன்றம்
செல்வதற்கு தூண்டியதுகூட இந்த எதிரணி தரப்புதான்.
ஜனாதிபதி தேர்தல்
நாட்டில் உள்ள சட்டத்தின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்துகளை வெளியிடலாம்.
ஆனால், அரசமைப்பின் பிரகாரமே செயற்பாடுகள் இடம்பெறும். அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பாளர்களின் விவகாரம்: பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
