பொருட்களின் விலை எப்போது குறையும்? அமைச்சர் அறிவிப்பு
பொருட்களின் விலைகள் எப்போது குறைக்கப்படும் என்பது குறித்து பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் மூன்று, நான்கு மாதங்களில் பொருட்களின் விலைகள் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் காரணமாக உற்பத்தி வீழ்ச்சியினால் உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் நெருக்கடியான நிலைமை உருவாகியுள்ளது.
மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவது குறித்து அரசாங்கம் வருத்தமடைகிறது. தமது ஆட்சியில் பொருட்களின் விலை ஏறுவதனை எந்தவொரு அரசாங்கமும் விரும்புவதில்லை.
மேற்குலக நாடுகளிலும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. அத்துடன் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
டொலர் பற்றாக்குறை மற்றும் உலக சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பனவற்றினால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri