ரம்புட்டான் சாப்பிட்ட சிறுவன் மரணம்! அதிர்ச்சியடைந்த தாயார் வைத்தியசாலையில்
மித்தெனிய பகுதியில், ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மித்தெனிய - பல்லே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த்.. விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்
எமனாக மாறிய ரம்புட்டான் விதை
தனது வீட்டில் வாங்கி வைக்கப்பட்டிருந்த ரம்புட்டானை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை, ரம்புட்டான் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் இழப்பையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் திடீரென நோய்வாய்ப்பட்ட சிறுவனின் தாயார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.