தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள்
இராமநாதபுரம் மாவட்ட கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
மேலும் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்வதில் காலதாமதமாகும் பட்சத்தில் வரும் 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம், 19ஆம் திகதி தொடருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கடற்றொழில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
இராமநாதபுரம்- இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்திலிருந்து 61 நாட்கள் கடற்றொழில் தடைக்காலம் முடிந்து கடற்றொழிலுக்கு சென்ற 55 நாட்களில் நேற்று வரை 61 கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள 61 இராமநாதபுரம் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், தொடர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக கடற்றொழிலாளர்கள் பிரச்சினை இன்றி கடற்றொழிலில் ஈடுபட இரு நாட்டு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக இராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட கடற்றொழில் விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தினசரி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலாவணி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
