அர்ச்சுனா கிளிநொச்சி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்..! விடுக்கப்பட்ட சவால்
கிளிநொச்சி மக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேலமாளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று(24.03.2026) ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு வேளையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க
மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் எனவும் சமூக அடையாளங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்ற அனுப்பி வைக்கப்பட்டவர் இப்படியான மனவேதனை அளிக்கக்கூடிய வகையிலான கருத்துக்களை தெரிவிப்பது வருத்தத்திற்குரியது.

அரசியல் விடயங்களை பேசுகின்ற பொழுது மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வகையில் பேசுவது நல்ல விடயம்.
இதனை விடுத்து ஒரு பிரதேசவாதத்தை தூண்டும் வகையும் கிளிநொச்சி மக்களை பற்றி அவதூறு வார்த்தைகள் பேசுவது அநாகரிகமான செயல்.
இந்த விடயம் பேசப்பட்டது தொடர்பாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிளிநொச்சி மக்கள் தற்பொழுது கொந்தளித்து உள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கிளிநொச்சி மக்களின் நன்மதிப்பை பாதிக்கப்படக்கூடிய வகையில் உள்ளதை கிளிநொச்சி மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam