கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Indian fishermen Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Thevanthan Oct 08, 2026 12:12 PM GMT
Report

கச்சத்தீவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான விவகாரம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக கடற்தொழிலாளர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகள் வரவேற்கத்தக்கவை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம்

அதில் மேலும், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீளப் பெற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையின் போதே, இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர் சஞ்சய் குமார் தலைமையிலான அமர்வு, தமிழக கடற்தொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் | Ramalingam Chandrasekar Statement

குறிப்பாக, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையாமல் இருப்பது தொடர்பில் தமிழக கடற்தொழிலாளர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளமை, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.

மேலும், விசாரணையின்போது நீதியரசர் சஞ்சய் குமார், இலங்கைக்கு தான் சென்றிருந்தபோது அங்குள்ள மக்கள் கடற்கரை மற்றும் பொது இடங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காண்பித்த சமூகப் பொறுப்புணர்வைத் தாம் அவதானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மக்கள் பொது இடங்களில் குப்பைகளை வீசாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களின் இத்தகைய சமூகப் பொறுப்புணர்வும், கடல் சூழலைப் பாதுகாப்பதில் காணப்படும் அக்கறையும் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்கக்கூடும் எனவும் நீதியரசர் தனது அவதானிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் | Ramalingam Chandrasekar Statement

இலங்கை கடற்பரப்பில் காணப்படும் மீன்வள நிலைமை தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

மீன்வள நிலைமை 

இது தொடர்பில் மேலும், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்குமாறு தமிழக கடற்தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது.

இலங்கையின் கடல் வளங்களையும் கடல் சூழலையும் பாதுகாப்பது எமது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். எமது கடற்பரப்பில் சட்டவிரோதமான மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு நாம் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள், குறிப்பாக அடித்தளத்தை அழிக்கும் வகையிலான மீன்பிடி முறைகள், எமது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் பாதிக்கின்றன.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் | Ramalingam Chandrasekar Statement

எனவே, சர்வதேச கடல் எல்லையை மதிப்பதும், ஒவ்வொரு நாட்டினதும் கடல் வளங்கள் மற்றும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமானதாகும்.

கச்சத்தீவு தொடர்பான 1974ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஒப்பந்தமும், 1976ஆம் ஆண்டு கடல் எல்லை மற்றும் மீன்பிடி தொடர்பான ஏற்பாடுகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு தெளிவானது.

அத்துடன், கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன் கடல் வளங்களையும் பாதுகாக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் நீடித்த தீர்வுகளை நோக்கி முன்னேறுவது முக்கியமானது என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் | Ramalingam Chandrasekar Statement

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US