தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் - இராமலிங்கம் சந்திரசேகர்
தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமே இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“காரைதீவு மண் மகத்துவம் வாய்ந்தது. சுவாமி விபுலானந்தர் பிறந்த பெருமை உடையது. காரைதீவு என்பது ஒரு வரலாறு. ஒரு வாழ்வியல்.
தனித்துவம்
இந்த மண்ணில் கால் பதிக்க வேண்டும் என்கின்ற எனது மிக நீண்ட நாள் அபிலாஷை இன்று தான் நிறைவேறி உள்ளது.
காரைதீவு பிரதேச மக்களின் பிரச்சினைகளை நாம் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கின்றோம். காரைதீவு மண்ணின் தனித்துவம் தொடர்ந்து பேணப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.
நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். ஆனால் தமிழர்கள் தமிழர்களாக வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ வேண்டும். சிங்களவர்கள் சிங்களவர்களாக வாழ வேண்டும். இதுதான் அழகு” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



