தேசபந்து தென்னகோன் வழங்கியுள்ள வாக்குமூலம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வுத் துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன், கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பதவி நீக்கம்
இதேவேளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவு அடுத்த மாதம் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
