சுமந்திரனை கண்டுகொள்ளாத மக்கள்! கடுமையாக சாடிய கடற்றொழில் அமைச்சர்
தமிழரசுக்கட்சியின் பதில்பொதுசெயலாளர் சுமந்திரன் அறிவித்த கடையடைப்பு போராட்டத்தை மக்கள் கணக்கெடுக்கவில்லை என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று(29) மாலை தேசிய சக்தியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது போலியான போராட்டங்களை முன்னெடுக்க மக்களை தூண்டுகின்றனர்.
இவ்வாறான போராட்டங்களை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை.
எமது சில தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் ரணிலுக்கு பின்னால் சென்ற போது அவர்களுக்கு செம்மணி புதைக்குழி, இசைபிரியா விடயங்கள் கண்ணுக்கு தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - தேவந்தன்



