திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் பேரணி
யாழ்ப்பாண நகரில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ். திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபயணமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10 மணியளவில் ஒன்றுகூடியவர்கள் நகரை சுற்றி நடைபயணத்தில் ஈடுபட்டனர்.
நடை பயணம்
இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு திருநர் சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம் என நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

திருநர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையால் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.



Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam