அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி! - தவராசா கலையரசன்
அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இன்று முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தில் வைத்து இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி பேரணியில் பல மத தலைவர்கள் , அரசியல் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள், எமது வடக்கு - கிழக்கு தாயக பிரதேசங்களில் தொடராகத் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக பேரெழுச்சியாக இருக்கின்றது.
70 வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் எமது மக்கள் பெரும்பான்மை சமூகத்தின் கீழ் அடிமையாகத் தொடர்ச்சியாக ஆளும் அரசாங்கத்தின் ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக அரசின் அநீதிகளுக்கு எதிராக இந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி இடம்பெற்று வருகிறது.
இந்த பேரணி இலங்கை அரசுக்கு மாத்திரமல்ல சர்வதேசத்திற்கும் இந்த தமிழ் பேசும் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் எழுச்சியாகப் பார்க்கின்றோம்.
யுத்தம் முடிவடைந்த கையோடு தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வினையும் வழங்காது, எமது பிரதேசத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கோடு அரசு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan