ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் ரகித ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் அருண வருணஹண்டிக ஆகிய மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட நிலையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கெதிரான வழக்கை இன்று (3) பிற்பகல் 2:00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, முதல் சந்தேகநபருக்காக முன்னலையாகும் சிரேஷ்ட வழக்கறிஞர் அசோக வீரசூரிய, தாம் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் முன்னிலையாகி வருவதால், இந்த வழக்கை பின்னர் எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி, இந்த வழக்கு பிற்பகல் 2:00 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் அருண வருணஹண்டிக ஆகியோர் இன்று (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த மாதம் (25) கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்கள்
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக்கவை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளிலிருந்து நீக்கி, வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி அவரை சாதாரண கைதியாக தடுத்து வைப்பதற்கும் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2023 மார்ச் மாதத்தில், விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹண்டிக ஆகியோர் துபாய்க்குச் சென்றிருந்ததாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
எழுத்துப்பூர்வ முறைப்பாடு
இவர்கள் ஒரே விமானத்தில் துபாய்க்குச் சென்று, ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிக மதுவந்தி மற்றும் மிடிகம ருவன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியைச் சந்தித்ததாகவும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

இதன்பின்னர், ஹரக்கட்டாவின் மனைவியிடமிருந்து இலஞ்சத்தைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஹரக் கட்டாவின் மனைவி மதுஷானி பொலிஸாரிடம் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்திருந்ததாகவும், நதுன் சிந்தகா என்ற ஹரக் கட்டாவும் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam