ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய முடியாது - வெளியாகியுள்ள தகவல்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இது தொடர்பில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பொன்றை தயார் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் டெல்லிக்கு விஜயம் செய்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இது பற்றி ஒரு குறிப்பு தயார் செய்து கொடுத்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது சரியல்ல.
இதில் சிலருக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பின் அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது.
எனவே இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ய முடியாது. பரோலில் வேண்டுமானால் சில காலம் அவர்கள் வெளியே இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
