ராஜீவ் காந்தியின் கடைசி வார்த்தை! நேரடி சாட்சியமான முன்னாள் பொலிஸ் அதிகாரியின் பரபரப்பு தகவல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரும் கடந்த 11ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் பொலிஸ் அதிகாரி பரபரப்பு தகவல்
இதனை தொடர்ந்து சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நளினி விடுதலையான பின்பு செய்தியாளரைச் சந்தித்து கைது தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் நளினி ஊடகங்களிடம் கூறியவை அனைத்தும் பொய் எனவும்,ராஜீவ்காந்தி கொலையின் போது உடனிருந்தேன் எனவும் பல முக்கிய தகவல்களை முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேரடி சாட்சியம்
ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்திற்கு நளினி உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடன் அங்கு விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.
நீண்ட நேரம் அவர்கள் ராஜீவ்காந்திக்கு மாலை அணிவிக்க வேண்டும் என காத்திருந்தனர்.பின்னர் அதற்கு அனுமதியில்லாத காரணத்தினால் அவர்களை அனுப்பிவிட்டேன்.செல்லும் போது என்னை பார்த்து நளினி ஒரு மௌனமாக புன்னகை செய்தார்.
இதற்கு பின்பு ராஜீவ் காந்தி வருகை தந்தவுடன் கூட்ட நெரிசலில் என்னை மக்கள் ராஜீவ்காந்தி மீது தள்ளிய போது என்னை பார்த்து முதுகில் தட்டி WE RELAX என கூறினார். நான் அவரை பார்த்த சிரித்த மறுகணமே குண்டு வெடித்துவிட்டது.
ஆகவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நாடமாடும் பாதிக்கப்பட்ட சாட்சியமாக நான் இருக்கின்றேன்.என்னிடம் துப்பாக்கிகளை தந்தால் நானே அவர்களுக்கு தண்டனை வழங்கிவிடுவேன் என்றும்.
இதனை செய்யாமல் ஊடகங்கள் நளினியை நேர்காணல் செய்துக்கொண்டிருக்கின்றது முடியுமானால் ராஜீவ் காந்தி மனைவியிடம் சென்று மன்னிப்பு வழங்கியமை சரியா , தவறா என கேள்வியெழுப்புமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.