நளினி சொல்வதெல்லாம் பொய்! ராஜீவ்காந்தி கொலையின் போது உடனிருந்தேன்..! பொலிஸ் அதிகாரி பரபரப்பு தகவல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரும் கடந்த 11ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நளினி விடுதலையான பின்பு செய்தியாளரைச் சந்தித்து கைது தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
பொலிஸ் அதிகாரி பரபரப்பு தகவல்
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் நளினி ஊடகங்களிடம் கூறியவை அனைத்தும் பொய் எனவும்,ராஜீவ்காந்தி கொலையின் போது உடனிருந்தேன் என முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் நளினி தெரிவித்துள்ள தகவல் அனைத்தும் பொய்.பிரதமர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்திற்கு நளினி உயிரிழந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர் சுபாவுடன் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.
படித்த பட்டதாரியான நளினி ராஜீவ்காந்தி யார் என்பதே தெரியாது என கூறுவதே வேடிக்கையான விடயம்.
தமிழீழ விடுதலைப்புலிகளை பற்றி எதுவும் தெரியாது என கூறுபவர் இலங்கையில் விடுதலைப்புலிகளின் அமைப்பிலிருந்த முருகனை எவ்வாறு காதலித்து திருமணம் முடித்துக்கொண்டார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நளினியின் உதவியுடனேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து தங்களது தேவைகளை செய்துக்கொண்டதாகவும்,நளினி கூறும் கருத்துகளில் எவையும் உண்மையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.