விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் பொட்டம்மானின் பெயரும் இணைப்பு! மாற்றி எழுதப்பட்ட ஓர் சரித்திரம்(Video)
கடந்த முப்பது வருட காலமாக தமிழர் வரலாற்றில் இருந்த ஒரு கசப்பான சம்பவம் நேற்றைய தினத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இத்தனை வருட காலம் சிறைவாசம் அனுபவித்து வாழ்நாளின் மொத்தத்தையும் தொலைத்த மிகுதி ஆறு பேரின் சிறைக்கூண்டு நேற்று திறக்கப்பட்டது.
சுதந்திரக் காற்றை அனுபவிக்க அந்த ஆறு பேரும் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.
பல சர்ச்சைகள், கொந்தளிப்புக்கள், உணர்வுபூர்மான தருணங்கள் என பலவற்றை இந்த கொலை வழக்கு ஒருசேர தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில் ராஜீவ் காந்தியின் கொலையும், அதன் பின்னணி மற்றும் வழக்கின் போக்கு என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்,
-நன்றி - பிபிசி தமிழ்-