ரணிலின் பக்கம் தாவுகிறார் சஜித் தரப்பின் முக்கிய புள்ளி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ராஜித சேனாரத்ன இணையப் போவதாக தகவல் வெளிவந்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைகிறார் என தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தத் தகவலை தனிப்பட்ட ரீதியில் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன, சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலர் இணையவுள்ளனர் என்றும் கூறப்பட்டு வந்தது. இதன் பின்னர், அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் எனவும் கூறப்பட்டு வந்தது.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான ராஜித சேனாரத்ன எம்.பி. மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைகிறார் என்றும் அவருக்கு முக்கிய அமைச்சு பொறுப்பு ஒன்று வழங்கப்படவுள்ளது என்றும் கூறப்படுகிறது.