தமிழ் மக்களின் வாக்குகளுக்காக நடந்த பிள்ளையான கைது..!

Kalutara Dr Rajitha Senaratne Karuna Amman Pillayan Eastern Province
By Rakesh Apr 19, 2025 06:02 PM GMT
Report

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை அரசாங்கம் கைது செய்தது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இன்று(19.04.2025) சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஆயுதப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய ஒருவரே கருணா. அவரது மிக முக்கிய சகாவாக பிள்ளையான் இருந்தார். 

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு கிடுக்குப்பிடி! கட்டுநாயக்கவில் விசேட அதிரடி நடவடிக்கை

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு கிடுக்குப்பிடி! கட்டுநாயக்கவில் விசேட அதிரடி நடவடிக்கை

கிழக்கு மாகாணம்

ஆனையிறவு உட்பட 14 இராணுவ முகாம்களைச் சுமார் 4 நாட்களில் புலிகள் அழித்தனர். இந்த அனைத்து தாக்குதல்களையும் கருணாவே மேற்கொண்டார். கருணா அம்மானின் மாற்றத்தினாலேயே கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகள் இழந்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா அம்மான் தொடர்ந்து இருந்திருந்தால் இராணுவத்தினரால் ஒருபோதும் தொப்பிகலவை கைப்பற்றியிருக்க முடியாது. இந்திய இராணுவம் கூட தொப்பிகலவுக்குச் செல்ல அஞ்சியது.

தமிழ் மக்களின் வாக்குகளுக்காக நடந்த பிள்ளையான கைது..! | Rajitha Senarathne On Pillaiyan Arrest

கருணா வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தொப்பிகலவையும் கைப்பற்ற முடிந்தது. கருணா மற்றும் பிள்ளையான் புலிகளிலிருந்து பிரிந்த பின்னரே என்றுமே கைப்பற்றப்ப முடியாது எனத் தெரிவிக்கப்பட்ட தோராபோரா மலையைக் கூட கைப்பற்ற முடிந்தது.

அது மாத்திரமின்றி கிழக்கு மாகாணம், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னரே விடுதலைப் புலிகளுக்கான ஆயுதப் பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தாம் பாதுகாக்கப்படுவோம் என்று நம்பியே கருணாவும் பிள்ளையானும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நண்பன்

அவ்வாறிருக்கையில் அரசு அவர்களைக் காட்டிக் கொடுத்தால் அது நியாயமற்றது. இதன் ஊடாக வடக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே அரசின் நோக்கமாகும்.

கருணா மற்றும் பிள்ளையான் கைது செய்யப்படுவது புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகும். இதனை நோக்கமாகக் கொண்டே அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றது.

தமிழ் மக்களின் வாக்குகளுக்காக நடந்த பிள்ளையான கைது..! | Rajitha Senarathne On Pillaiyan Arrest

கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நாளே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியடையும் நாளாகும். கலாநிதி என்.எம்.பெரேரா கூறியதைப் போன்று இன்று எதிரியின் எதிரி நண்பனாகியிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் எதிரி கருணா. கருணாவின் எதிரி புலம்பெயர் ஈழத்தமிழர்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நண்பன் ஜே.வி.பி. ஆகும். இது வரலாற்றுப் பேரழிவுக்கு வழிவகுக்கும்”

நடராஜா ரவிராஜின் கொலையுடன் பிள்ளையானுக்கு தொடர்பு

நடராஜா ரவிராஜின் கொலையுடன் பிள்ளையானுக்கு தொடர்பு

மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! ஜனாதிபதி உறுதி

மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! ஜனாதிபதி உறுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US