மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! ஜனாதிபதி உறுதி

Nuwara Eliya Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Thirumal Apr 19, 2025 11:56 AM GMT
Report

அரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்ற போதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக்கூட்டம் தலவாக்கலையில் இன்று (19.04.2025) நடைபெற்றது.

ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மாற்றியமைக்கப்பட்ட நிலைமை

மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்காக கடந்த காலங்களில் மக்கள் பிரித்தாளப்பட்டனர். வடக்கு, தெற்கு, மலையகம் என வெவ்வேறாக பிரிந்து வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலைமைக் காணப்பட்டது. ஆனால் கடந்த தேர்தலின்போது மக்கள் இந்நிலைமையை மாற்றியமைத்தனர்.

மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! ஜனாதிபதி உறுதி | President Anura Kumara Dissanayake Statement

அனைவரும் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் திரண்டனர். எனவே, அனைத்து மக்களையும் சமமாக நடத்தக்கூடிய அரசாங்கமொன்றே தேவை. அவ்வாறானதொரு அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது. இந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம். இனவாதத்தை தோற்கடிப்பதற்கு நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் போதவில்லையெனில் புதிய சட்டங்களை இயற்றியாவது இனவாத அரசியல் தோற்கடிக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் சர்ச்சைக்குரிய துண்டுப்பிரசுரம் : வலுக்கும் எதிர்ப்பு

தேசிய மக்கள் சக்தியின் சர்ச்சைக்குரிய துண்டுப்பிரசுரம் : வலுக்கும் எதிர்ப்பு

மலையக மக்கள் பங்களிப்பு

எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு மலையக மக்கள் பெரும் பங்களிப்பு வழங்குகின்றனர். தமது உயிரைக்கூட இந்நாட்டின் மண்ணுக்காக உரமாக்கியுள்ளனர். எனவே, இலங்கை அவர்களின் நாடு அல்ல என எப்படி கூறமுடியும். இந்நாட்டில் பிறந்து, வளர்ந்து, இறக்கின்றனர் எனில் அவர்கள் எங்கிருந்து வந்தனர் எனக் தேடிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! ஜனாதிபதி உறுதி | President Anura Kumara Dissanayake Statement

மலையக மக்கள் இங்கு வந்து 200 வருடங்கள் கடந்துவிட்டன. தற்போது அவர்கள் எங்கிருந்து வந்தனர் என தேடுவதில் என்ன பயன் உள்ளது? எனவே, மலையக மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறும் உரிமை கிடையாது. நாம் மனிதர்கள். அனைவரினதும் உரிமைகளை ஏற்கும் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் மக்களுக்கிடையில் மீண்டும் போர் ஏற்படாத வகையிலான நாடொன்றை நாம் கட்டியெழுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார். 

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US