அரசுக்கு எதிரான பேரணி குறித்து ராஜித மழுப்பல்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும் முடிவை கட்சி எடுத்திருந்தாலும், அது பற்றி தான் இன்னமும் பரிசீலித்து வருவதாகவும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "தேசிய மக்கள் சக்தி அரசு மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

எதிரணி வசம் சிறந்த மாற்றுத்தேர்வு
எனவே, எதிரணி வசம் சிறந்த மாற்றுத் தேர்வு இருக்க வேண்டும். மாறாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் பயணிக்கத் தொடங்கினால் அது பிரச்சினைக்கே வழிவகுக்க வேண்டும்.
மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பொது எதிரணியொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்." என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam