நாட்டை களவெடுத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! றஜீவன் எம்பி
கடந்த காலங்களில் இந்த நாட்டை களவெடுத்து இந்த மக்களை நடுத்தெருவில் விட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. றஜீவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு நேற்று(27) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கோரிக்கை
தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் இந்த நாட்டை அழித்து குட்டிச்சுவராக்கி எங்களை நடுத்தெருவில் விட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை செவி சாய்த்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக நீதித்துறை இந்த விடயத்தை முன்னெடுத்து வருகின்றது.
நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட பிணை விடயம் தொடர்பாக அதற்கு ஆஜராகிய 300 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அவருக்கு உள்ள உடல் உபாதைகள் தொடர்பில் பட்டியலிட்டு காட்டி உள்ளார்கள் அவ்வாறு வருத்தம் உள்ள ஒருவர் மீண்டும் அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்கப் போவதில்லை.
தனது உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சிறந்த மருத்துவத்தை பெறுவதற்கும் அவர் அரசியல் வந்து ஓய்வு பெறுவது தான் சரியான வழி என்ற அவர் யார் தவறு செய்திருந்தாலும் சுயாதீனமாக தண்டிக்கப்படுவார்கள் இந்த நாடு மீள முடியாத நாடாக காணப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார
இந்த நாட்டில் வாழ முடியாது என வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் ஏராளமானவர்கள். இந்த நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ்வாறு பொறுப்பேற்றுக் கொண்டு எதிர்வரும் முதலாம் திகதி ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
முன்பு திருட்டுத்தனமாக கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்காக பல லட்சம் ரூபாய் பணங்களை பெற்றார்கள் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு பணம் பெற்றார்கள் சாரதி அனுமதி பத்திரங்களுக்காக பணங்களை பெற்றார்கள் இவற்றையும் விட இந்த நாட்டை களவெடுத்து இந்த மக்களை நடுத்தெருவில் விட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தினால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
