அதிகளவு ஆயுதங்களைப்பெற்றுக் கொண்ட மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள்
கடந்த காலங்களில் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சில் இருந்து அதிகளவிலான ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் புதல்வரான கடற்படை அதிகாரி யோஷித ராஜபக்ச மாத்திரம் கடந்த காலங்களில் ஏழு துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசி
கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் அவற்றில் ஐந்து துப்பாக்கிகள் தனிப்பட்ட பாவனைக்குப் பயன்படுத்தப்படும் 9 மி.மீட்டர் ரக கைத்துப்பாக்கிகளாகும்.
அதே போன்று முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் கைத்துப்பாக்கிகள் உள்ளடங்கலாக எட்டு ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதே நேரம் அரசாங்கத்தில் எதுவித முக்கிய பதவியும் வகிக்காத நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசி என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் அவண்ட் கார்ட் நிறுவன உரிமையாளர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஒன்பது ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களுக்கு வெளியிட்ட பட்டியலில் இருந்து இந்த விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.