விடுதலைப் புலிகளின் தலைவரை விட மோசமான அழிவை ராஜபக்சவினர் நாட்டுக்கு செய்துள்ளனர்: சம்பிக்க சாடல்
முப்பது ஆண்டுகள் போரில் இருந்து நாட்டை விடுவித்ததாக கூறிய ராஜபக்சவினர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நாடடுக்கு மிக மோசமான அழிவை தேடி தந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார். சுனாமி அனர்தத்தை விட மிக மோசமான அனர்த்தம் நாட்டுக்கு செய்யப்பட்டு விட்டது.
அரசாங்கத்திலும் இருக்கும் பலருக்கும், ராஜபக்சவினருக்கு வாக்களித்தவர்களுக்கு இந்த அழிவை புரிந்துக்கொண்டுள்ளனர். நாட்டை மிக மோசமான நிதி நெருக்கடி நோக்கி கொண்டு சென்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர் என்பது உலகத்திற்கு தெளிவாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகி பல மாதங்கள் முக்கிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்க முடியாமல் போனது. இதன் மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதி தயாரில்லை என்பது தெளிவானது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.