அடுத்த தேர்தலில் ராஜபக்சர்களின் கதை முடியும்: சம்பிக்க ரணவக்க - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது எனவும், அத்தேர்தலில் ராஜபக்சர்கள் மக்களால் முழுமையாக துடைத்தெறியப்படுவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாடு இன்னும் இருள் சூழ்ந்த பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் என்பது தீர்க்கமானது.
இதனால் முன்கூட்டியே ஆட்சியாளர்களால் தேர்தல் நடத்தப்படலாம். அது உள்ளூராட்சிசபை, மாகாணசபை தேர்தலாக இருக்காது. பொதுத்தேர்தலாகவே அமையும்.
அந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதும் தெரியாது. ஆனால் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவருவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய ராஜபக்சக்கள் நிச்சயம் துடைத்தெறியப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |