ஒரு வார்த்தையால் வசமாக சிக்கிய ராஜபக்சர்கள்
செவ்வந்தியின் தொலைபேசியை பரிசோதனை செய்தவர்களுக்குதான் தெரியும் என்னை எவ்வாறு அவருடைய தொலைபேசியில் பதிவு செய்துள்ளார் என்று. ஆனால் அதிகமானோர் செவ்வந்தியின் தொலைபேசியை பரிசோதனை செய்ய காத்திருப்பதாவே தோன்றுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுக்கு இப்போது நாமல் மற்றும் ராஜபக்ச தான் கனவில் தெரிகிறது போல்.கனவு கண்டு விழித்த போது“நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச” போன்றன தென்றுகிறதோ தெரியவில்லை.
ஒரு விடயத்தை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாமல் என்றவுடன் அவர்களுக்கு எனது ஞாபகம் மட்டும் தான் வருகிறது. ஆனால் ஏன் அவருக்கு அவரின் அவரின் கட்சியில் உள்ள நாமல் கருணாரத்தன பெயர் ஞாபகம் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்தித் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |