தீவிரவாத பாணியில் ராஜபக்சர்கள் நகர்வு - செய்திகளின் தொகுப்பு
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதக் கும்பலால் மேற்கொண்ட வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுடன் அரச தலைவரும் பிரதமரும் தொடர்புபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒரு மாத காலத்திற்கு மேலாக அகிம்சை வழியில் மிக கண்ணியமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தை மீறும் வகையில் அல்லது பண்பாடற்ற முறையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் பதியப்படவில்லை. அவர்கள் வன்முறைக்குப் பதிலாக அகிம்சையே கை கொண்டார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri