ராஜபக்சக்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்: சுமந்திரன் பகிரங்கம் - செய்திகளின் தொகுப்பு
நீதிமன்றம் நட்ட ஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் இரண்டு கோடி இருபது இலட்சம் மக்களுக்கும் நட்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சக்களிடம் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நாட்டுக்கு வெளியே ராஜபக்ச சகோதரர்கள் சேர்த்து வைத்துள்ள பணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் அனைத்தையும் நாட்டுக்குள் கொண்டுவர முடியும். அந்தப் பணத்தை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பலாம்.
முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதாரர் களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களும் பொது நிதியைக் கொள்ளைடியத்தன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. அவர்கள் நட்ட ஈட்டைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 22 மணி நேரம் முன்
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam