ரணிலின் ஆதரவாளர்கள் இன்றி ராஜபக்சர்களால் வெற்றிபெற முடியாது: மகிந்தானந்த இடித்துரைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் ராஜபக்சர்களால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அளுத்கமகே,
ஜனாதிபதித் தேர்தல்
“ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு ஒருபோதும் தான் விலகப் போவதில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க விரும்பாமல் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்தினார்.
ரணிலின் வெற்றிக்காக கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளதால், 2024 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அபார வெற்றியைப் பெறுவார்." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam