ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற முடியாது! வெளியான எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு
ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவாகவே முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை எனவும், எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன வலுவாக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், அதற்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,