ஆட்சி அதிகாரம் இருக்கும் போது அறிவு இருக்காது என்பதை சமல் ராஜபக்ச காட்டியுள்ளார் - ஐ.மக்கள் சக்தி
ஆட்சி அதிகாரம் இருக்கும் போது அறிவு இருக்காது என்பதை முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் காட்டியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் விதம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெளிவுப்படுத்திக்கொண்டிருந்த போது, சமல் ராஜபக்ச சண்டடைக்கு வருமாறு பேசினார்.
நாடாளுமன்ற சம்பிரதாயங்களை கவனத்தில் கொள்ளாது அவர் இப்படி நடந்துக்கொண்டார்.52 நாள் அரசாங்கத்தை பாதுகாத்துக்கொள்ள நாடாளுமன்றத்தில் மிளகாய் தூள் தாக்குதல் வரலாற்றை நேற்று மீண்டும் நினைவூட்டியது.
சமல் ராஜபக்ச யாரை தன்னுடன் சண்டைக்கு வருமாறு அழைத்தார். இந்த நாட்டில் யுத்தத்தை வென்ற தலைவரை.
நாடாளுமன்றத்திற்குள் வந்து வெளியில் வா சண்டையிடலாம் எனக் கூறுகிறார்.ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர் எப்படி அறிவின்றி போகிறது என்பதை பாருங்கள்.
நாடாளுமன்றத்தை தற்போது ஆளும் கட்சியின் வன்முறைகளை அரங்கேற்றும் இடமாக மாற்றியுள்ளனர் எனவும் சந்திம விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
