ராஜபக்சக்களுக்காக பிரச்சாரம் செய்தமைக்காக வருந்துகின்றேன் – ரோஹன வீரசிங்க
ராஜபக்சக்களுக்காக பிரச்சாரம் செய்தமைக்காக வருந்துகின்றேன் என பிரபல சிங்கள இசைக் கலைஞர் கலாநிதி ரோஹன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முகநூல் பதிவொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் முகநூல் பதிவில்,
இன்று எனது அன்பு சகோதரி நந்தா மாலனி, சகோதரர் சுனில் ஆகியோர் காலி முகத்திடல் போராட்டத்தில் பங்குபற்றினர். இதனைத் தொடர்ந்து எனது மௌனம் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர்.
நான் உண்மையில் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றேன், அவர்களை ஆசீர்வதிக்கின்றேன். ராஜபக்சக்களுக்காக பிரச்சாரம் செய்தமையை இட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். அவர்களுக்கு ஆதரவளித்தமையினால் எனது வாழ்க்கையில் அழிக்க முடியா கறும்புள்ளி ஏற்பட்டுவிட்டது என்பதனை இதயபூர்வமாக ஏற்றுக்கொள்கின்றேன்.
அனைவரினாலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவது வழமையானதாகும். நானும் 69 லட்ச வாக்காளர்களில் ஒருவரேயாவேன். இந்த அரசாங்கம் குடும்ப ஆட்சி ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு தவறுகளை இழைத்து வருகின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
அமைதியாக இருந்தாலும் போராடும் மக்களின் இதயத்துடிப்பு எனக்கு புரிகின்றது என ரோஹன வீரசிங்க தெரிவித்துள்ளார்.



