நாமலை ஆட்சிக்கு கொண்டு வர ராஜபக்ச தரப்பு தீவிரம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு நெருக்கமான தரப்பினர், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் தீவிர இனவாதப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மறைந்த முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மரணத்தின் போது அவர் தமிழ் அரசியல் கைதியொருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய விடயம், உடத்தலவின்னைப் பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பத்துப் பேரை மிலேச்சத்தனமாக கொன்றொழித்த பயங்கரம் என்பன குறித்து பலரும் பேசத் தலைப்பட்டனர்.
லொஹான் ரத்வத்தை சிங்கள மக்களின் மீட்பர்
அதற்குப் பதிலாக லொஹான் ரத்வத்தையை சிங்கள மக்களின் மீட்பர்களில் ஒருவராக மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடத் தலைப்பட்டனர்.
அதே போன்று இன்றைய தினம் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட கடையடைப்பு குறித்தும் சமூக வலைத்தளங்களில் தீவிரமான இனவாதப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த இனவாதப் பிரசாரங்களின் பின்னணியில் ராஜபக்ச தரப்பை ஆதரிக்கும் சமூக வலைத்தளப் பதிவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் செயற்படுவதை வெளிப்படையாகக் காணமுடிந்துள்ளது.
ராஜபக்ச தரப்பின் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான நாமல் ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காகவே ராஜபக்ச தரப்பு மற்றும் அதன் ஆதரவாளர்கள் இவ்வாறான இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
