ஜனாதிபதிக்கு இடையூறாக மாறும் ராஜபக்சர்கள்! இல்லாது செய்ய வழி தேடும் ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றிக்கு இடையூறாக இருக்கும் மக்கள் ஆதரவு குறைந்த ராஜபக்சர்களை ஓரம் கட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இடையூறாக மாறியுள்ள ராஜபக்சர்கள்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்களால் பெருமளவில் நிராகரிக்கப்படும் ராஜபக்சர்கள் தனது வெற்றிக்கு இடையூறாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருதுகின்றார்.
நாட்டில் மிகவும் மக்கள் ஆதரவு குறைந்த ஒருவராக பஸில் ராஜபக்ச இருக்கின்றார். அவரே பொதுஜன பெரமுனவின் தலைவர் ஆவார். இதனால் தனக்கு சுமையாக இருப்பவர்களை எவ்வாறு இல்லாது செய்வது என்பதனை ஜனாதிபதி சிந்திக்கலாம் என குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய நிலைப்பாட்டின் படி சமகால அரசாங்கத்துடன் எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri