சவேந்திர சில்வா - ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்கா அமைக்கும் வியூகம்(Video)
தற்போது ஜனாதிபதியாக இருக்கக் கூடிய ரணில் விக்ரமசிங்க மீண்டும் சர்வதேச நாடுகளை எப்படி ஏமாற்றலாம் என்ற வேலைத்திட்டங்களை இறக்கிவிட்டிருக்கின்றார் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் சண்சுதா தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது, இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலைகள் மாத்திரம் அல்லாது அதற்கு முன்னர் நடந்த கொடுமைகள் பற்றியும் சென்று ஆராய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட காலப்பகுதி அதற்கு முன்னரான நிலை போன்றவை வரைக்கும் விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கின்றோம். இது இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியும்.
பிரேரணை ஒன்று கொண்டு வந்ததன் பின்னர், கனேடிய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தடை கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா அதற்கு முன்னர் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது கொண்டு வந்திருந்த தடை, அது மாத்திரம் அல்லாது நாங்கள் வாழும் நாடுகளிலும் அது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சி எடுத்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,