"இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சவின் குடும்ப ஆட்சியே காரணம்"
ராஜபக்ச அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது. இதுவே இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்(Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஆசிரியர்களின் கல்வித்தரம், அதிபர்களின் தரம் என்பவற்றுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படாமல் இன்று ஒரு போராட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
ராஜபக்ச குடும்ப ஆட்சியின் காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது. இதுதான் இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது.
ஒரு இரவிலேயே அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்று சொன்னால் அவர்கள் எவ்வாறு மாறமுடியும். குறிப்பாக உலகில் இயற்கை விவசாயம் இயற்கையான உணவு மனிதனுக்கு முக்கியமானது. இது உலக அரங்கில் தற்போது வளர்ந்து வருகின்றது.
இது இலங்கையிலும் தற்போது வளர்ந்து வருகின்றது. அதற்காக நாங்கள் குரல்
கொடுத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri