மகிந்தவின் வீட்டுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை பணம்.. ரணில் வெளியிடும் தகவல்கள்
ராஜபக்சவினரின் இல்லத்தை புனரமைக்க நாங்கள் நான்கு ரூபாவைக் கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவினால் சபையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை புனரமைக்க அரச நிதியில் இருந்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து ஜனாதிபதி முற்றிலுமாக மறுத்துள்ளார்.
நான்கு ரூபாவைக் கூட செலவு செய்ய மாட்டோம்

நாங்கள் ரூ. 400 மில்லியன் அல்லது வெறும் நான்கு ரூபாவை கூட ராஜபக்சவின் இல்லத்தை புனரமைக்க செலவிடப் போவதில்லை.
இருப்பினும் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய விடயங்களை கவனிப்பதற்கு சட்டரீதியாக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri