ராஜபக்சக்களின் பெரும்பான்மைக்குள் தள்ளப்பட்ட ரணில்: சாத்தியமற்று போகும் தமிழரின் தீர்வு(Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் பெரும்பான்மையிலேயே தங்கியிருப்பதாக இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரஊப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டில் தற்போது தமிழ், முஸ்லீம் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்றுத்தருவது என்பது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.
இதற்கு காரணம் ராஜபக்ச அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மையில் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ரணில் தள்ளப்பட்டுள்ளார்.
இன்னமும் ரணிலோடு முரண்பட்டு கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ராஜபக்ச கூட்டத்தோடு இருக்கின்றார்கள்.
மேலும், மொட்டு கட்சியை சேர்ந்த 40 தொடக்கம் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் பயணிக்க தயாராக உள்ளதாக நான் நினைக்கின்றேன்.
அத்துடன், ரணிலோடு தொடர்ந்து பயணிப்போம் எனவும் ராஜபக்சக்களின் உறவு எங்களுக்கு தேவையில்லை எனவும் கூறிக்கொள்ளும் கூட்டம் கணிசமான அளவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அது ஒருபோதும் அதி கூடிய பெரும்பான்மையை பெறுவதற்கான வழிமுறைகளை தோற்றுவிக்கப்போவதில்லை." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
