ராஜபக்சக்களிடம் நட்டஈட்டை வழங்குவதற்கான போதிய நிதி உள்ளது: சாடுகிறார் சுமந்திரன்
ராஜபக்சக்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய நட்டஈட்டை வழங்குவதாக இருந்தால் 22 மில்லியன் மக்களுக்கும் அவர்கள் பணம் வழங்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் அதற்கான பணம் ராஜபக்சக்களிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(15.11.2023) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுநிதி கொள்ளை
மேலும் தெரிவிக்கையில்,
“ராஜபக்சக்கள் இந்த பணத்தை மீட்க்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும். நாட்டிற்கு வெளியே ராஜபக்ச சகோதரர்கள் சேர்த்துவைத்துள்ள பணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கமுடியும்.
வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் அனைத்தையும் நாட்டிற்குள் கொண்டுவரமுடியும். அந்த பணத்தை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பலாம்.
முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதாரர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களும் பொதுநிதியை கொள்ளைடியத்தன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் அவர்களிடத்தில் நட்டஈட்டை செலுத்தவேண்டும் என உத்தரவிட்டிருக்கவேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan
