ராஜபக்ச யுகம் விரைவில் முடிவுக்குவரும்! குமார வெல்கம - செய்திகளின் தொகுப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலோடு ராஜபக்சர்கள் யுகம் நாட்டில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான கட்சியொன்று விரைவில் உருவாக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகளிலிருந்து, பசில் ராஜபக்சவால் நாட்டை மீட்க முடியாது.
பசிலால் மட்டுமல்ல இந்த அரசாங்கத்திலுள்ள ஏனையோராலும் அதனைச் செய்ய முடியாது என குமார் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பசில் இருந்தார், ஆனால் அவர் அப்போது செய்தது என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,