தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையின் கிழக்குக் கடற்கரையை நோக்கி ஏறக்குறைய மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.
இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும். எனவே எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று வடமேற்கு அல்லது மாறுபட்ட திசையில் வீசும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இதன் காரணமாக காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான
கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வானிலை மையம்
எதிா்வு கூறியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
