100 மில்லி மீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
நாட்டில் ஏற்பற்றுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அடுத்த சில மணித்தியாலத்துக்கு பல்வேறு பகுதிகளில் அதிக அழைவீழ்ச்சி பெறப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல், மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(04) பிற்பகல் விடுத்த சிவப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன்கூடிய மழை
குறித்த காலப்பகுதியில் இடியுடன்கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பங்களில் கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
[5L1HSXJ
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri