கொட்டகலை தொடருந்து வீதியின் புனர்நிர்மாண பணிகள் குறித்து வெளியான தகவல்
கொட்டகலையில் சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்தார்.
சீரான காலநிலை தொடருமானால், எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதியளவில் பணிகளை முழுமையாக நிறைவு செய்து ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
மலையக தொடருந்து சேவையை மீண்டும் முழுமையாக வழமைக்கு கொண்டு வருவதற்கான புனரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சீரற்ற காலநிலை
சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், ஜூலை மாதம் முதல் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக பணிகளை திட்டமிட்ட வேகத்தில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால், புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.




