தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவு
தொடருந்து நிலைய அதிபர்கள் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது.
பணிப்புறக்கணிப்பு
நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தங்களுடைய பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்காவிடின் அடுத்த வாரம் தங்களது சங்கத்தினர் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றும் இன்றும் தபால் தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன், தூர இடங்களுக்கான தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
