தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் திடீர் பணிப்புறக்கணிப்பு: மக்கள் அதிருப்தி
நாடளாவிய ரீதியில் நேற்று (09) நள்ளிரவில் இருந்து தொடருந்து நிலைய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக நானுஓயா தொடருந்து நிலையம் மூடப்பட்டு இராணுவத்தினரும் அதிகமான பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடருந்து பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
சிரமத்தில் மக்கள்
குறிப்பாக அதிகமான சுற்றுலா பயணிகள் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்து மீண்டும் திரும்பி செல்கின்றனர்.
இதனால், நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேவேளை, நேற்று (09) பிற்பகல் 12:45 இற்கு கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி புறப்பட்ட தொடருந்து ஒன்று நானுஓயா தொடருந்து நிலையத்திலேயே சேவைகளை இரத்தச் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
