ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிகள் போராட்டம்: வடக்குக்கான ரயில் சேவையும் பாதிப்பு
ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்குக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9: 45 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் யாழ் தேவி புகையிரதம் சேவையில் ஈடுபட வில்லை.
அதேபோல் 1: 45 மதிக்குப் புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதமும் சேவையில் ஈடுபடவில்லை. தற்போது யாழ் தேவி புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்கின்றது.
இதனால் முன்பதிவு செய்து புகையிரதத்தில் பயணம் செய்வதற்கு வருகைதந்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டதுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
நாளைய தினம் தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கலுக்கு
வெளிமாவட்டங்களுக்கு செல்ல இருந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற
நிலையைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
