கந்தளாயில் காவலர்கள் இன்றி கைவிடப்பட்ட நிலையில் தொடருந்து கடவை
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பராக்கிரம மாவைத்தையில் அமைந்திருக்கும் தொடருந்து கடவை கடந்த ஒரு மாத காலமாக காவலர்கள் இன்றி காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதி நான்கு வீதி ஒன்று இணையும் சந்தியாகவும் இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரயாணம் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
நாள் கொடுப்பனவு
மேலும் இந்த தொடருந்து கடவையில் கடந்த ஆண்டு ஆசிரியர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது தொடருந்தில் மோதி பலியாகியுள்ளார்.
குறித்த தொடருந்து கடவை ஊழியர்களுக்கு ஒரு சில வருடங்களாக கந்தளாய் பொலிஸாரினால் ஒரு நாள் கொடுப்பனவு 250 ரூபாய் வழங்கப்பட்டு வந்தாகவும் தற்போது வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதால் சம்பளத்தை அதிகரித்து தருமாறு கூறி வேலையிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த தொடருந்து கடவை ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் அரச அதிகாரிகள் கவனக்குறைவாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
