ராமேஸ்வரம் புகையிரத போக்குவரத்து அடுத்த ஆண்டு ஆரம்பம்!
ராமேஸ்வரம் பாம்பன் புகையிரத பாலத்தின் மறுசீரமைக்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவடைந்தாலும், புகையிரத நிலைய சீரமைப்பு பணிகள் நடக்கும் என்பதால், இந்த ஆண்டு முழுவதும் ராமேஸ்வரத்திற்கு புகையிரத போக்குவரத்து நடைபெறாது எனவும் அடுத்த ஆண்டில் தான் புகையிரத போக்குவரத்தை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்க கடலுக்குள் அமைந்துள்ளது.
புகையிரத பாதுகாப்பு ஆணையம்
பாம்பன் புகையிரத பாலம். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இரவு ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் புகையிரத ஒன்று வரும்போது தூக்குப்பாலத்தில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. இது பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பாம்பன் புகையிரத பாலத்தில் பயணிகள் புகையிரத போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாலத்தை ஆய்வு செய்த சென்னை ஐ.ஐ.டி., குழு, போக்குவரத்தை துவக்க 'க்ரீன் சிக்னல்' கொடுத்தது. ஆனால் 109 வயதான பாம்பன் பாலத்தில் புகையிரத போக்குவரத்தை துவக்கினால் விபரீதம் ஏற்படலாம் என கருதி, புகையிரத பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்க மறுத்தது.
புதிய பாலம் பணி
ராமேஸ்வரத்திற்கு புகையிரத போக்குவரத்து இன்றி வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், புதிய புகையிரத பாலம் கட்டுமான பணியை துரிதப்படுத்திய அதிகாரிகள், 90.20 கோடி ரூபாயில் ராமேஸ்வரம் புகையிரத நிலையத்தை மறுசீரமைக்கும் பணியை பெப்ரவரியில் துவக்க உத்தரவிட்டனர்.
வரும் மார்ச் மாதம் புதிய பாலம் பணி முடிந்தாலும், புகையிரத நிலைய சீரமைப்பு பணிகள் நடக்கும் என்பதால், இந்த ஆண்டு முழுவதும் ராமேஸ்வரத்திற்கு புகையிரத போக்குவரத்து இருக்காது. அடுத்த ஆண்டில் தான் புகையிரத போக்குவரத்து துவக்க வாய்ப்பு உள்ளது எனவும் புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாம்பன் கடலில் 2.05 கி.மீ.க்கு அமைக்கப்பட்ட புகையிரத பாலத்தில், 1914ல், போக்குவரத்து துவங்கியது. இப்பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் வழியாக சரக்கு, கடற்படை கப்பல்கள், மீன் பிடி படகுகள் கடந்து சென்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.